ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச்சத்து மிகவும் அவசியம்.
ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
கீரை, இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இஞ்சி, தேனுடன் சிறிதளவு பேரீச்சம்பழம் சேர்த்து தினசரி சாப்பிட்டு வர இதைத் தடுக்கலாம்.
உலர் திராட்சை, முந்திரி,பாதாம்,பேரீச்சை போன்றவற்றை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, அரைத்துச் சாறாக குடிக்கலாம். இது உடல் வலுப்பெற உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தினசரி இரண்டு நெல்லிக்காய் மற்றும் 100 கிராம் அளவு கேரட்டை பச்சையாக சாப்பிட்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தினசரி ஒரு வகையான பழம் என்னும் வீதம் பழமாகவோ பழச் சாறாகவோ குடிக்கலாம்.