பொட்டுக் கடலை - 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - 2 கொத்து, பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை, பூண்டு பல் - 12.
செய்முறை:
முதலில் அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு கடாயில் கடலைப்பருப்பை சேர்த்து நன்றாக வறுக்கவும்,
இந்த பருப்பை ஒரு தட்டில் மாற்றி வைத்து, அதே கடாயில் உளுந்தப்பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்,
உளுந்தம்பருப்பு வறுப்பட்டதும், அதே தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் நாம் தயார் செய்யும் பொடிக்கு பருப்பு வகைகளை தனித்தனியாக வறுத்து எடுத்தால் கூடுதல் சுவை தரும்.
கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அதில், பயட்கி மற்றும் காய்ந்த மிளகாய்யை சேர்த்து வதக்கவும். பயட்கி மிளகாய் இல்லை என்றால் 15 காய்ந்த மிளகாயை வதக்கவும்.
மிளகாய் நன்கு வதங்கியதும் எள் சேர்க்க வேண்டும். இப்போது எள் வெடிக்கத் துவங்கியதும் பொட்டு கடலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். நாம் வறுத்து வைத்தவை நன்கு ஆறிய பின்னர், மிக்சி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இப்போது சுவையான ஆந்திர ஸ்டைல் பூண்டு இட்லி பொடி தயார்.