பஹல்காம் தாக்குதல்: இனி இப்படி ஒரு துயரம் நடக்கக்கூடாது- நடிகர் சூர்யா வேதனை
பஹல்காம் தாக்குதலை அறிந்து அதிர்ச்சியில் மனமுடைந்து போனேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன்.
இனி யாருக்கும் இப்படியான துயரம் நடக்கக்கடாது. இந்தியா எப்போதும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத வெறுப்பு பரவலுக்கு, நாம் இரையாகிவிடக்கூடாது- நடிகை ஆண்ட்ரியா
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நினைத்து மனம் உடைந்துபோனேன். மேலும், இச்சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் இன்னும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தும் மனம் உடைகிறது.
நாட்டில் பிரிவுவாதம் அதிகரித்துவரும் இக்கட்டான இச்சூழலில், குறிப்பிட்ட மதம்/சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பரவலுக்கு, குடிமக்களான நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும் என்றார்.
கொடூர பயங்கரவாதத் தாக்குதல் மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடி- அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல், மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடியாகும். ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம், காஷ்மீரின் இதயம் போன்றது.
அமரன் படப்பிடிப்பின்போது, பல அற்புதமான நினைவுகள் அங்கு ஏற்பட்டன. அங்குள்ள மக்கள் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்துகொண்டனர்!
தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.