வீர தீர சூரன் படத்தின் ஆத்தி அடி ஆத்தி பாடல் வெளியானது

வீர தீர சூரன் படத்தின் ஆத்தி அடி ஆத்தி பாடல் வெளியானது

Published on
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
விவேக் வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடலான கல்லூரும் பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இரண்டாம் பாடலான "ஆத்தி அடி ஆத்தி" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சாதிகா இணைந்து பாடியுள்ளனர்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com