கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மாரடைப்பை தடுக்க உதவும் 5 வகை மீன்கள் குறித்து அறிந்துகொள்வோம்...
சூரை மீன்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த வகை கொழுப்பு அமிலங்கள், ரத்தக்குழாய்களில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் தேக்கத்தைக் குறைக்க உதவி புரிந்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
கானாங்கெளுத்தி மீன்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிதும் உதவுகின்றன. உலக அளவில் முக்கியமான மீனாக கருதப்படும் கானாங்கெளுத்தி மீன் மாரடைப்புக்கு எதிரியாக விளங்குகிறது.
இறையன் மீன்
டிரவுட் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை பெருமளவு குறைக்கிறது. எனவே இந்த மீனை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வெங்கணை அல்லது வெங்கணா மீன்
ஈ.பி.ஏ. மற்றும் டி.எச்.ஏ. என்னும் 2 வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்ற மீன்களை விட அதிகமாக உள்ளன. இவை உடலினுள் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. வைட்டமின் D அதிகளவில் உள்ளது.
மத்தி மீன்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்றவையும், இரும்புச் சத்து, செலினியம் போன்ற தாதுக்களும் அதிகமாக நிறைந்துள்ளன.
மத்தி மீனை அடிக்கடி வாங்கிச் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, ரத்த சர்க்கரை அளவும் குறையும். ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த 5 மீன் வகைகளும் குறைந்த கொலஸ்ட்ரால் அளவை கொண்டுள்ளதால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவது மாரடைப்புடன், பக்கவாதத்தையும் தடுக்கும்.