ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் 5 பழங்கள்

ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் 5 பழங்கள்

Published on
புளிப்பு செர்ரி சாறு குடிப்பது அல்லது புளிப்பு செர்ரிகளை சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனை அதிக அளவில் கொண்டிருப்பதால் ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவுகிறது.
கிவி படுக்கைக்கு முன் சாப்பிட சிறந்த பழம். ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது மற்றும் செரோடோனின் என்ற ஹார்மோனைக் கொண்டுள்ளது, தூக்கம்-விழிப்பு சுழற்சியை நிர்வகிக்க உதவுகிறது.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு கிவி பழங்களை சாப்பிடுவது, உடல் ஓய்வெடுக்கவும், எளிதாக தூங்கவும் உதவும்.
அன்னாசிப்பழத்தில் உள்ள மெலடோனின் தூக்க-விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்துகிறது.
தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்தை மேம்படுத்துகிறது.
வாழைப்பழம் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவக்கூடிய ஒரு உணவு என்று சொல்லலாம்.
பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ட்ரிப்டோபன் என்ற அமிலம் உள்ளது, இவை தூக்கத்தை தூண்டக்கூடியவை.
ட்ரிப்டோபன் மூளைக்கு சென்று மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது, இது தூக்கத்தை தூண்டுகிறது.
ஆப்பிள் பழத்தில் மெலடோனின் என்ற ஒரு ஹார்மோன் மெக்னீசியம் என்ற ஒரு தாதுவும் உள்ளதால் நரம்பு மற்றும் தசைகளை தளரச் செய்து தூக்கத்தை மேம்படுத்துகிறது.
படுக்கைக்கு முன் ஆப்பிள் பழம் சாப்பிடுவது தூக்கத்தை மேம்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன
ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம், ஆனால் அது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான பலனைத் தராது. சிலருக்கு ஆப்பிள் தூக்கத்தை தூண்டலாம், மற்றவர்களுக்கு அது பலன் தராது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com