வாழைப்பழங்கள், வைட்டமின்கள் A, B மற்றும் E ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இவை சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகின்றன.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்து புத்துயிர் பெறச் செய்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் முன்கூட்டியே வயதாவதை எதிர்த்துப் போராடுகின்றன.
பப்பாளி
சருமத்தில் நன்மை பயக்கும் முக்கியப் பழம் பப்பாளி என பலரும் அறிவர். பப்பாளியில் உள்ள பப்பைன் நொதி, முகத்தில் உள்ள இறந்தசெல்களை அகற்ற உதவுகிறது.
இது முகத்தை உள்ளிருந்து பிரகாசமாக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் A, C மற்றும் E சருமத்தை சேதமடையாமல் பாதுகாத்து ஊட்டமளிக்கின்றன.
பெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சரும செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன.
இந்த பழங்களில் வைட்டமின் C அதிகமாக உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது உறுதியான மற்றும் இளமையான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
ஆரஞ்சு
ஆரஞ்சுகளில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது பளபளப்பான சருமத்திற்கு முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.
வைட்டமின் C கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. முக சுருக்கத்தை குறைக்கிறது. சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தை எதிர்த்து போராடுகிறது.
ஆப்பிள்
ஆப்பிள்களில் வைட்டமின்கள் A, B மற்றும் C, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் சருமத்திற்கு நீரேற்றத்தை அளிக்கும்.
சருமத்தின் இளமையான தோற்றத்தை பராமரிக்கவும் உதவும். மேலும் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து நச்சு நீக்கியாக செயல்படுவதால் சருமத்திற்கு நன்மை பயக்கும்.