உங்க குழந்தைகள் அதிகமாக செல்போன் பயன்படுத்துகிறார்களா?

Maalaimalar

செல்போன்களை அதிகமாக பொழுதுபோக்கக்கூடிய சாதனமாகவே பயன்படுத்துகின்றோம்.

சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட இளம் வயதினர் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் பொருட்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

அளவுக்கு அதிகமாக செல்போன் பார்ப்பது குழந்தைகளின் நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் மூளை செயல்பாடுகளை பாதிக்கிறது.

செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம், தூக்க கோளாறுகள், திடீர் கோபம் ஆகிய பிரச்சனைகள் காணப்படுகின்றன.

சிறு வயதிலேயே செல்போன் பயன்படுத்துவது மனச்சோர்வு, கவலை மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறனில் குறைபாட்டை உருவாக்குகிறது

நீண்ட நேரம் செல்போன் திரையை பார்ப்பதால் கண் எரிச்சல், மங்கலான பார்வை, தலைவலி போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்சனை அதிகரிக்கும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

வெளி விளையாட்டுகளைத் தவிர்த்துவிட்டு, ஒரே இடத்தில் அமர்ந்து செல்போன் பார்ப்பதால் உடல் உழைப்பு குறைந்து உடல் பருமன் மற்றும் சுறுசுறுப்பின்மை உண்டாகிறது.

குழந்தைகளின் அதிகப்படியான செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த தெளிவான நேர வரம்பை நிர்ணயிக்கலாம்.

குழந்தைகளின் கவனத்தை ஓவியம் வரைதல், கதை புத்தகங்கள் வாசித்தல், இசைக் கருவிகள் வாசித்தல், புதிர் விளையாட்டுகளில் கவனத்தைத் திருப்பலாம்.

குழந்தைகளின் கவனத்தை மாற்றுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம். இதனை குழந்தைகளிடம் படிப்படியாகவும் அன்பாகவும் நடைமுறைப்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

பெற்றோர்களும் வீட்டில் இருக்கும் நேரத்தில் செல்போன் பயன்பாட்டைக் குறைத்து அவர்களுடன் பேசுவது, விளையாடுவதை வழக்கமாக்கலாம்.