தினமும் காலை உணவாக வேக வைத்த முட்டைகள் 2, ஸ்டார்ச் குறைவான வேக வைத்த காய்கறிகள் 1 கப், கார்போஹைட்ரேட் குறைவான பழங்கள் 1 கப் சாப்பிட வேண்டும்..மதியம் மற்றும் இரவு உணவாக கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள வேக வைத்த காய்கறிகள் 1 கப், வேக வைத்த முட்டை 1 சாப்பிட வேண்டும்..இந்த உணவு முறையைப் பின்பற்றும்போது எளிய உடற்பயிற்சிகள் அல்லது நடைப்பயிற்சி செய்வது கூடுதல் பலன் தரும்..2 வாரங்களுக்கு மட்டுமே இதனைப் பின்பற்ற வேண்டும்..அடுத்த இரண்டு வாரங்களுக்கு வழக்கமான உணவுகளை சாப்பிடலாம். அளவாக உண்ண வேண்டியது அவசியம்..பிறகு மீண்டும் அடுத்த 2 வாரங்களுக்கு 'முட்டை டயட்' பின்பற்றலாம். புரதம் நிறைந்த உணவுகள் செரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும்..இந்த டயட் முறையை தொடங்கும் முன்பு மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது கட்டாயமாகும்..Explore