உலகின் விசித்திரமான வேலைகள்

Maalaimalar

தொழில்முறை ஸ்லீப்பர்

ஹோட்டல் அறைகள் அல்லது படுக்கைகளின் தரம், வசதியைச் சோதிக்கத் தூங்குவதற்காகச் சம்பளம் பெறும் வேலை.

வண்ணப்பூச்சு காய்வதைக் கண்காணிப்பவர்

புதிய வண்ணப்பூச்சுகள் எவ்வாறு உலர்கின்றன, நிறம் மாறுகின்றன என்பதைக் கவனித்துப் பதிவு செய்யும் வேலை.

தொழில்முறை அரவணைப்பாளர்

தனிமை, மன அழுத்தம் அல்லது மனவேதனையால் பாதிக்கப்பட்டு மனித தொடுதலின் அரவணைப்பு தேவைப்படுபவர்களுக்குக் கட்டிப்பிடித்து மனநல ஆறுதல் வழங்குவது இவர்களின் முழுநேர வேலை.

நெட்ஃபிக்ஸ் டேக்கர்

திரைப்படங்கள் மற்றும் தொடர்களைப் பார்த்து, அவற்றின் வகை, உள்ளடக்கம் ஆகியவற்றை வகைப்படுத்திப் பரிந்துரைகளுக்கு உதவும் வேலை.

வாடை நுகரும் நிபுணர்

வாசனைத் திரவியங்கள், டியோடரண்டுகள் அல்லது பிற பொருட்களின் வாசனையை முகர்ந்து பார்த்து அவற்றின் தரத்தை மதிப்பிடும் வேலை.

ட்ரெயின் புஷர்

நெரிசல் மிகுந்த ரெயில் நிலையங்களில் பயணிகள் ரெயிலுக்குள் ஏறவும், கதவுகள் சரியாக மூடவும் உதவும் வேலை.

பனிச்சரிவு முன்னறிவிப்பாளர்

மலைப்பகுதிகளில் பனிச்சரிவு ஏற்படும் அபாயத்தைக் கணித்து எச்சரிக்கை விடுக்கும் வேலை.

தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்