விஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் தான் கிருஷ்ண அவதாரம். அவரது 10 அவதாரங்களைப் பின்பற்றி மனிதன் உணர வேண்டிய உலக உண்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்..தாயின் வயிற்றில் இருந்து ரத்தத்தோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். அதாவது மனிதர்களின் பிறப்பு நிகழும் முறை..மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை..ஆறாம் மாதம் குழந்தையாக தவழ்ந்து, முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி..எட்டாம் மாதம் எழுந்து உட்கார்ந்து, கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்ம அவதாரம்..ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்..வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது..திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது..இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது..இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது..Explore