மாலை மலர்
நாம் சில நேரங்களில் சில மனிதர்களை எளிதாக நம்பிவிடுவோம். அது ஏன் என்று நீங்கள் என்றாவது நினைத்தது உண்டா?
உண்மையில் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து சில உளவியல் காரணங்களை இங்கு காணலாம்.
ஒருவரின் முகச்சாயல், குரல், அல்லது பேசும் விதம் நமக்கு ஏற்கனவே தெரிந்த மற்றும் நம்பிக்கைக்குரிய ஒருவரைப் போல இருந்தால், மூளை உடனடியாக அவர்களை பாதுகாப்பானவராகக் கருதும்.
ஒரே ஊர், ஒரே மொழி, அல்லது ஒரே மாதிரியான பின்னணி கொண்டவர்களிடம் இயல்பாகவே ஒரு நெருக்கம் ஏற்படும்
நமக்குப் பிடித்த விஷயங்கள் அவர்களுக்கும் பிடித்திருந்தால், "இவர் நம்மைப் போன்றவர்" என்ற எண்ணம் உருவாகும்
ஒருவர் நம்மிடம் அன்பாகவோ, அக்கறையாகவோ பேசும்போது நம் மூளையில் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இது மற்றவர்கள் மீதான பயத்தைக் குறைத்து, உடனடி நம்பிக்கையை உருவாக்குகிறது.
முதல் பார்வையில் ஏற்படும் நம்பிக்கை என்பது பெரும்பாலும் நமது ஆழ்மனதின் பாதுகாப்புக் கணிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான ஒற்றுமையால் உருவாகிறது. இருப்பினும், இந்த உடனடி நம்பிக்கை எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது என்பதால், பழகிய பிறகே ஒருவரை முழுமையாக எடைபோடுவது நல்லது.