பழங்களை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது?

Maalaimalar

காலையில் வெறும் வயிற்றில்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது மிகச் சிறந்தது. இது செரிமான மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, சத்துக்களை உடல் எளிதில் உறிஞ்ச உதவுகிறது.

காலை 11 மணி அளவில்

காலை உணவுக்குப் பிறகு 2-3 மணி நேரம் கழித்து பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும். மதியம் அதிகமாகப் பசிப்பதையும் இது கட்டுப்படுத்தும்.

உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும்

உடற்பயிற்சிக்கு 30 நிமிடங்களுக்கு முன் வாழைப்பழம் சாப்பிடுவது ஆற்றலைத் தரும். பயிற்சிக்குப் பின் பழங்கள் சாப்பிடுவது இழந்த ஆற்றலை மீட்டெடுக்க உதவும்.

மாலை 4 - 5 மணி அளவில்

மாலையில் எண்ணெயில் பொரித்த உணவுகளுக்குப் பதிலாகப் பழங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இது இரவு உணவு வரை வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.

இரவு உறங்கச் செல்லும் முன் வேண்டாம்!

உறங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பே பழங்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இரவில் பழங்களில் உள்ள சர்க்கரை சத்து தூக்கத்தைக் கெடுக்கலாம்.

சாப்பிட்ட உடனே பழம் சாப்பிடலாமா?

மதியம் அல்லது இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இது செரிமானத்தைத் தாமதப்படுத்தி வயிறு உப்புசத்தை ஏற்படுத்தலாம். குறைந்தது 1 மணி நேரம் இடைவெளி விடவும்.

தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்