புல்லட் காபி என்றால் என்ன? காலைல ஒரு கப் போதும்!

Maalaimalar

பிளாக் காபியுடன் பசு நெய் அல்லது வெண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் ஹை-எனர்ஜி டிரிங்க் தான் புல்லட் காபி. இதை நெய் காபி என்றும் சொல்வார்கள்.

1 கப் ஸ்ட்ராங் பிளாக் காபி, 1 ஸ்பூன் சுத்தமான பசு நெய், தேவைப்பட்டால் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்.

சூடான காபியுடன் நெய் சேர்த்து மிக்ஸியில் 30 நொடிகள் நன்கு அடிக்கவும். நுரை பொங்க பொங்க லேட்டே போல் வரும்.

காபியின் காஃபின் + நெய்யின் கொழுப்பு சேர்ந்து, திடீரென சோர்வு வராமல் நாள் முழுவதும் சீரான எனர்ஜி தரும்.

இதில் உள்ள கொழுப்பு வயிறு நிரம்பிய உணர்வை தரும். காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, Intermittent Fasting செய்பவர்களுக்கு சிறந்தது.

நெய்யில் இருந்து கிடைக்கும் கீட்டோன்கள் மூளைக்கு மாற்று எரிபொருளாக செயல்பட்டு கவனம் செலுத்த உதவும்.

ஒரு கப் புல்லட் காபியில் 200-350 கலோரிகள் வரை உள்ளது. தினசரி கலோரி கணக்கை தாண்டிவிடும்.

இது முழுமையான காலை உணவு அல்ல. தினமும் இதை மட்டும் குடித்தால் வைட்டமின், புரதச்சத்து கிடைக்காமல் போகும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், கீட்டோ டயட் பின்பற்றுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கலாம்.