மருதாணி உடனே சிவக்க வேண்டுமா? இதை செய்யுங்க!

Rebecca

இலைகளிலேயே அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகள் எடுத்து அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு, கொஞ்சம் சர்க்கரை கலந்துவிட்டு பின்னர் மருதாணி போடலாம். இது நல்ல சிவப்பு நிறத்தை அளிக்கும்.
மேலும் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக, மருதாணி காய காய அதன்மீது விட்டுவருவதும் நல்ல நிறத்தை கொடுக்கும்.
அதுபோல யூக்கலிப்டஸ் தைலத்தை மருதாணி வைத்துள்ள இடத்தில் தடவினால் நல்லநிறம் கொடுக்கும்.
மருதாணியை கழுவ சோப்புத் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது நிறத்தை நீக்கும். அதுபோல மருதாணி போட்டு சிறிது நேரத்திலேயே எடுத்துவிடக்கூடாது.
அதனால்தான் பலரும் தூங்குவதற்கு முன் கையில் மருதாணி வைத்து தூங்குவார்கள். பகலில் வேலைகள் நிறைய இருக்கும்.
அதனால் மருதாணியை உடனே எடுக்கவேண்டிய சூழல்வரும். முடிந்தவரை இரவு நேரத்தில் போட்டுவிட்டு, காலையில் கையை கழுவுங்கள்.
கிராம்பை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மருதாணி அரைக்கும்போது பயன்படுத்தினால் நல்ல சிவப்பாக நிறம் இருக்கும்.
அதுபோல முதலில் கைக்கழுவ தண்ணீரை பயன்படுத்தாமல், கடுகு எண்ணெயை பயன்படுத்தி மருதாணியை நீக்க வேண்டும். கடுகு எண்ணெய்க்கு பதில் யூக்கலிப்டஸ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
அழகிற்காக மட்டுமின்றி உடல் சூட்டை தணிப்பதற்காகவும், உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்காகவும் என மருதாணி வைப்பதற்கு மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன.
Explore