வேலூர்னாலே உங்களுக்கு என்ன நியாபகம் வரும்?

Maalaimalar

16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை இன்றும் அழகும் பெருமையும் சேர்க்கின்றது.

வேலூரின் பிரியாணியில் சேர்க்கப்படும் தனித்துவமான "முள்ளு கத்தரிக்காய்" மிகவும் ஃபேமஸ்.

வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு கொண்டதாகவும் உள்ளது.

வேலூர் திருமலைக்கோடியில் அமைந்துள்ள லட்சுமி நாராயணி கோவில், சுமார் 1,500 கிலோ சுத்தமான தங்கத் தகடுகளால் வேயப்பட்டது.

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர்மாவட்டத்தில் அமிர்தி உயிரியல் பூங்கா காணப்படுகிறது.ssss

ஆற்காடு பாலாற்றங்கரையில் செய்யாறு பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு உயர்ந்த நுழைவுவாயில் டெல்லி கேட் என்றழைக்கப்படுகிறது

இந்தியாவின் முதல் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டைக்குள் வெடித்தது. தொல்பொருள் அருங்காட்சியகமும் உள்ளது.

வேலூருக்கு அருகில் மலை மேல் அமைந்துள்ள ரத்தினகிரி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்தியாவின் டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒன்றான VIT பல்கலைக்கழகம் வேலூரில் அமைந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தின் பாரம்பரியமிக்க ஆம்பூர் பிரியாணியும், அர்காட் பகுதியில் கிடைக்கும் பாரம்பரிய இனிப்பான மக்ஹன் பீடாவும் மிகவும் பிரபலமானது.

இந்தியாவின் மொத்த தோல் ஏற்றுமதியில் 37% க்கும் மேல் வேலூர் மாவட்டத்திலிருந்துதான் நடக்கிறது.

பாலமதி மலை வேலூர் நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு அழகான மலைப் பகுதி.

உலகப் புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனை, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை வளாகம் என்ற பெயரில் சர்வதேசத் தரத்தில் ஒரு பிரம்மாண்ட மெடிக்கல் சிட்டியைப் புதிதாக உருவாக்கியுள்ளது.

சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களை இணைக்கும் முக்கியப் புள்ளியாக வேலூர் திகழ்கிறது.

வேலூர் மாவட்டத்தின் கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தம் போன்ற பகுதிகள் பாரம்பரிய கைத்தறி லூங்கிகள் & பட்டுப் புடவைகள் நெசவுக்குப் பெயர் பெற்றவை.