கிழங்குகளை உப்புப்போட்டு வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் சீக்கிரம் வேகாது..சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சம்பழச் சாறு பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்..உருளைக்கிழங்கை சீவியதும் சிறிது பயத்தம் பருப்பு மாவைத் தூவி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்..பால் பாயசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்..ரவாதோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை நன்கு சிவந்தும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்..சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்..கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும்..வத்தல் குழம்பு தயார் செய்யும் போது அவரை, கத்திரி, கொத்தவரங்காய் வத்தல்களை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்து விடும்..வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும். எண்ணெய்யும் அதிகம் குடிக்காது.Explore