Maalaimalar
பரோட்டாக்களின் ஆதி வடிவம் இதுதான். மைதா மற்றும் நெய் சேர்த்து வட்ட வடிவில், மெல்லிய பல அடுக்குகளுடன் பஞ்சு போல் சாஃப்ட்டாக இருக்கும்.
மதுரையின் பிரசித்தி பெற்ற இந்த வகை, பார்ப்பதற்கு பன் போலவே உப்பலாக இருக்கும். முட்டை மற்றும் பால் சேர்த்து பிசையப்படுவதால், கடித்தால் அவ்வளவு சாஃப்ட்டாக இருக்கும்.
தோசைக்கல்லில் சுடாமல், கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கப்படும். வெளிப்புறம் செம மொறுமொறுப்பாகவும், உட்புறம் மென்மையாகவும் இருக்கும்.
பரோட்டாவின் லேயர்கள் அனைத்தும் தனித்தனி நூல்கள் போலவோ அல்லது இடியாப்பம் போலவோ சுருள் சுருளாகப் பிரிந்து வரும்.
மாவை காற்றில் லாவகமாக வீசி, மிக மெல்லிய காகிதம் போல மாற்றி, சதுர வடிவில் மடித்துக் கல்லில் போடுவார்கள். இதன் உள்ளே முட்டை ஊற்றினால் அதுதான் 'முட்டை வீச்சு'.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இரண்டு அடுக்கு பரோட்டா. இதன் நடுவே கைமா செய்த சிக்கன், மட்டன் அல்லது காய்கறி மசாலாக்களை வைத்து மடித்து சுட்டு எடுப்பார்கள்.
பரோட்டாவைத் துண்டு துண்டாக நறுக்கி, முட்டை, சிக்கன்/மட்டன் துண்டுகள் மற்றும் காரசாரமான சால்னா சேர்த்து 'டக் டக்' என்று கல்லில் கொத்தி எடுக்கும் இந்த சுவைக்கு ஈடே இல்லை!
பரோட்டாவின் மீது தாராளமாக சிக்கன் அல்லது மட்டன் கிரேவி ஊற்றி, அதை வாழையிலையில் பொட்டலமாகக் கட்டி (கிழி), தோசைக்கல்லில் வைத்து ஆவியில் வேகவைப்பார்கள். இலையின் வாசம் பரோட்டாவை வேற லெவலுக்கு மாற்றும்.