Maalaimalar
துளசி திருமணம் என்பது துளசி செடிக்கும் கிருஷ்ணரின் வடிவமான சாளக்கிராமத்திற்கும் இடையே நடைபெறும் புனித திருமண சடங்காகும்.
கார்த்திகை மாதத்தில் பிரபோதினி ஏகாதசி முதல் கார்த்திகை பவுர்ணமி வரையிலான காலகட்டத்தில் கோவில்களிலும் வீடுகளிலும் துளசி திருமணம் நடத்தப்படுகிறது.
மாலை நேரத்தில் துளசி திருமண நிகழ்வை நடத்த வேண்டும். பிருந்தாவின் ஆன்மா இரவில் துளசி செடியில் தங்கியிருந்து, காலை வெளியேறுவதாக நம்பப்படுகிறது.
துளசி விவாகம் செய்பவர்களின் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி பெருகும். திருமணத்தடை உள்ளவர்களுக்கு அந்த நீங்கும்.
துளசி திருமணம் செய்வதால் திருமணமாகாத பெண்களுக்கு நல்லதொரு வாழ்க்கைத்துணை அமையும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
பக்தியுடன் துளசி திருமணத்தை நடத்துபவர்கள், பலயாகங்களைச் செய்த பலனைப் பெறுவார்கள். பாவங்கள் நீங்கி, புண்ணியம் வந்துசேரும்.
மகாலட்சுமியின் வடிவமாகவே துளசியை வழிபடுவதால், துளசி திருமணத்தை செய்பவர்களின் இல்லங்களில் லட்சுமிதேவியின் அருள் நிலைத்திருக்கும்.