திருச்சி என்றாலே மலைக்கோட்டை மட்டும் தானா?...

Maalaimalar

திருச்சி பொ. ஊ. மு. 3-ஆவது நூற்றாண்டில் சோழர்களின் ஆட்சியின் கீழ் தொடங்கியது.

சென்னைக்கு 322 கிமீ, கன்னியாகுமரிக்கு 374 கிமீ தொலைவில் கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் புவியியல் மையத்தில் அமைந்துள்ளது.

திருச்சி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் மிகவும் பிரபலமானது.

திருச்சியின் அடையாளங்களில் ஒன்று மணப்பாறை முறுக்கு.

தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த மாரியம்மன் கோயில் சமயபுரத்தில் உள்ளது.

பல்லவர், பாண்டியர், விசயநகரப் பேரரசு, நாயக்கர் அரச மரபு, கருநாடக அரசு மற்றும் பிரித்தானியர் ஆகியோராலும் ஆளப்பட்ட நகரம் திருச்சி.

திரு-சிலா-பள்ளி (பொருள்: "புனித-பாறை-ஊர்) தற்போது திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது.

"இந்தியாவின் ஆற்றல் தளவாட மற்றும் உற்பத்தித் தலைநகரம்" என்ற பெயரை இந்நகருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் உலகின் மிகப்பெரிய செயல்படும் ஆன்மீக வளாகமாகவும், 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வைணவத் தலங்களில் முதன்மையானதாகவும் விளங்குகிறது.

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையமும் அமைந்துள்ளது. துபாய், சவூதி அரேபியா மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு விமானங்களானவை இயக்கப்படுகின்றன.

எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது தலைநகரமாகத் திருச்சியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார்.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் பிரியும் இடத்தில் அமைந்துள்ள முக்கொம்பு (மேல் அணைக்கட்டு) சுற்றுலா தலமாகும்.

மதுரை நாயக்கர்களின் வழியில் இராணி மங்கம்மாள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் கட்டிய அரண்மனை அரசு அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது.

திருச்சி பழமையான கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் இயற்கை இடங்களுக்குப் புகழ்பெற்றது.

275 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான மலைக்கோட்டை (பாறை) அமைந்துள்ளது. இங்கிருந்து பார்த்தால் நகரின் அழகிய காட்சியை ரசிக்கலாம்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீருக்குரிய ஜம்புகேஸ்வரர் கோயில் (திருவானைக்காவல்) சிவத்தலமாக இது போற்றப்படுகிறது.