Maalaimalar
வீட்டின் நுழைவாயிலில் அல்லது பூஜை அறையில் உருளியை வைப்பது செல்வம், அமைதி மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்பது ஐதீகம்.
வீட்டின் வாசல், வரவேற்பறை, கிழக்கு, வடகிழக்கு திசைகளிலும் உருளியை வைக்கலாம்.
பிரம்ம முகூர்த்தத்தில் உருளியில் சுத்தமான நீர் மற்றும் மலர்களை வைத்து அலங்கரித்து விளக்கேற்றுவது குடும்பத்தில் ஐஸ்வர்யத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.
செம்பு, வெண்கலம், பித்தளை, பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட உருளிகள் சிறந்த பலன்களைத் தரும். எவர்சில்வர், அலுமினியம், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் உருளிகளைத் தவிர்க்க வேண்டும்.
உருளியில் உள்ள நீரை தினமும் மாற்றி புதிய மலர்களை வைக்க வேண்டும். உருளியில் மஞ்சள், பச்சை கற்பூரம், ஜவ்வாது அல்லது வெட்டிவேர் சேர்த்து நறுமணமாக வைக்கலாம்.
உருளி வைப்பது எதிர்மறை எண்ணங்களையும், கண் திருஷ்டியையும் நீக்க உதவும். வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும்.