Maalaimalar
வெற்றிவேல் முருகனின் அருளைப் பரிபூரணமாகப் பெறும் அற்புத நாள்.
ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியில், அசுரன் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த திருநாளே கந்த சஷ்டியாகக் கொண்டாடப்படுகிறது.
சஷ்டி திதி இன்று இரவு தொடங்கி, நாளை இரவு வரை நீடிக்கிறது. சூரிய உதயத்தில் சஷ்டி திதி இருப்பதால், நாளைய தினமே விரதமும் சூரசம்ஹாரமும் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாளை அதிகாலை நீராடி, முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் அல்லது எளிய சைவ உணவு எடுத்துக் கொள்ளலாம்.
நாளை முழுவதும் ‘கந்த சஷ்டி கவசம்’ மற்றும் ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை உச்சரிப்பதால் எதிரிகள் தொல்லை நீங்கி, மன அமைதி கிட்டும்.
“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பதற்கேற்ப, குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கடன் தீர நினைப்போர் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த பரிகார நாளாகும்.
நாளை மாலை சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும் விரதத்தை முடிக்கலாம். நாளை மறுநாள் முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்