சிங்கார சென்னைக்கு இன்று 386-வது பிறந்தநாள்...

Rebecca

1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதி கூவம் ஆற்றின் அருகில் மதராசப்பட்டினம் என்ற பகுதியை ஆங்கிலேயர்கள் வாங்க ஒப்பந்தமிட்டனர்.
இந்த நாள் தான் தற்போது சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர்கள் வாங்கிய நிலத்தில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. பிறகு கோட்டையை சுற்றிய பகுதிகளில் மக்கள் குடி பெயர்ந்தனர்.
கோட்டை மற்றும் சுற்றியுள்ள வடக்கு பகுதி மதராசப்பட்டினம் என்றும் தெற்கு பகுதி சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.
நாளடைவில் இந்த நகரம் முழுவதும் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது.
சாந்தோம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சிறிய கிராமங்களை படிப்படியாக மெட்ராஸ் நகரத்துடன் இணைத்து ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்தினர்.
Explore