Maalaimalar
கஷ்டப்பட்டு செய்யும் பலகாரங்களை, முறைப்படி பாதுகாத்து வைத்தால் தான், அவற்றின் சுவை கெடாமல், தன்மை மாறாமல் சில நாட்களுக்குச் சுவைக்க முடியும்.
பலகாரங்களை எப்போதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் காற்றில் உள்ள ஈரப்பதம், பலகாரங்களை நமுத்துப்போகச் செய்துவிடும்.
எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களின் அடியில், சுத்தமான வெள்ளை பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பரை விரித்து, அதன் மேல் பலகாரங்களை வைத்தால் அவை உபரி எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும்.
சுடச்சுடச் செய்த பலகாரங்களை உடனே டப்பாக்களில் போட்டு மூடக்கூடாது. பலகாரங்கள் முழுமையாக ஆறிய பிறகுதான் அவற்றை டப்பாக்களில் எடுத்துவைக்க வேண்டும்.
லட்டு, அதிரசம் போன்ற இனிப்புப் பண்டங்களையும், முறுக்கு, மிளகுசேவை போன்ற கார வகைகளையும் தனித்தனி டப்பாக்களில் வைக்க வேண்டும்.
இனிப்பு, காரம் இரண்டையும் ஒன்றாக வைத்தால் காரத்தின் மணம் இனிப்பிலும், இனிப்பின் மணம் காரத்திலும் கலந்து சுவை மாறிவிடும்.
பலகாரங்கள் செய்வதற்கு பயன்படுத்தும் எண்ணெய் புதிதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பலகாரம் செய்தால், சில நாட்களிலேயே ஒருவிதமான பழைய எண்ணெய் வாடை (சிக்கு மணம்) வந்துவிடும்.
முறுக்கு, தட்டை செய்யும்போது மாவின் ஈரப்பதம் நீங்கும்வரை நன்றாக வெந்த பின்பே எடுக்க வேண்டும்.
தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்