Maalaimalar
நெருப்பு தலமாக அமைந்த சிவாலயம்தான், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் ஆலயம்
திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும். காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும். காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி கிடைக்கும்
தில்லை என்னும் சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும். திருமறைக்காட்டில் நீராடினால் முக்தி கிடைக்கும். 'அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி'
சிவபெருமான் அடி முடி காண முடியாத வகையில், நெருப்பு பிழம்பாக உருமாறி நின்ற இடம், திருவண்ணாமலை
4 ராஜகோபுரங்கள் உள்பட 9 கோபுரங்களுடன் பிரமாண்டமாக காட்சி தரும் இந்த ஆலயத்தில், அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் தனித்தனி சன்னிதிகளில் காட்சியளிக்கின்றனர்.
இந்தியாவின் வடபகுதியில் இருக்கும் கயிலாய மலைக்கு ஒப்பாக, தென் பகுதியில் உள்ள திருவண்ணாமலை போற்றப்படுகிறது.
திருவண்ணாமலை 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், இந்த மலையில் ஒருவித காந்த சக்தி இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.