இந்த வார ஓடிடி ரிலீஸ்!

Rebecca

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கௌதம் தின்னனுரி எழுதி இயக்கிய அதிரடி திரில்லர் படம் 'கிங்டம்'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் 'லவ் மேரேஜ்'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில், சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களின் உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இப்படம் கடந்த 27ந் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
நாகராஜன் நடிப்பில் ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கிய படம் 'மாயக்கூத்து'. இப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்ததாக வெளியான படம் 'தண்டர்போல்ட்ஸ்'. இது எம்.சி.யுவின் 36-வது படமாகும். பிரபல இயக்குனர் ஜேக் ஷ்ரேயர் இயக்கி உள்ளார். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ரஹ்மான் சகோதரர்களால் எழுதி இயக்கப்பட்ட மலையாள படம் வசந்தி. இதில் வசந்தியாக ஸ்வாசிகா சிஜு வில்சன் நடித்துள்ளனர். இப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஜோனதன் எண்ட்விஸ்ட் இயக்கத்தில் ஜாக்கி சான், பென் வாங் உள்ளிடோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் (karate kid: legends). இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஜெய்தேவ் இயக்கத்தில் பாவனா நடிப்பில் வெளியான படம் 'தி டோர்'. மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
Explore