இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

Rebecca

பெண்கள் நிறைய நேரங்களை சமையல் அறையில் செலவிடுவதால் அந்த அறை நல்ல காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருத்தல் அவசியம்.
சமையலறை எந்த அளவில் இருந்தாலும் சரி, நுழைவாயிலில் கட்டாயம் ஒரு மிதியடி போட வேண்டும்.
சமையலறையில் தலைமுடி, நூல் போன்ற குப்பைகளைச் சேர விடாமல் அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
அரிவாள் மனை, தேங்காய் துருவி, காய்கறி நறுக்கப் பயன்படும் கத்தியில் உள்ள துருவைப் போக்க அவற்றின் மீது ஒரு வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் துரு இருந்த இடம் தெரியாமல் நீங்கிவிடும்.
கிழங்குகளை மூடி வைக்கக் கூடாது, காற்றோட்டமாக பரப்பி வைக்க வேண்டும்.
தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால் தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கும்.
வாழைத் தண்டு, சுரைக்காய், நூல்கோல் முதலிய காய்கறிகள் மீது நகம் வைத்தால் உள்ளே போவது போல் இருக்க வேண்டும். அது தான் பிஞ்சு.
பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்கும்.
Explore