Maalaimalar
தேனி மாவட்டம் முதலில் மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
தேனி மாவட்டத்தை "தமிழ்நாட்டின் Garden City" என்று அழைக்கப்படுகிறது.
தேனி மாவட்டம் ஏலக்காய், காபி மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மிகவும் புகழ்பெற்றது.
தேனி சின்னமனூர் மற்றும் போடிநாயக்கனூர் பகுதிகளில் கிடைக்கும் 'முட்டை லாப்பா' மற்றும் நாட்டுக்கோழி குழம்பு தனி சுவை வாய்ந்தது.
தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலைகள் சூழ அமைந்த இயற்கையான பகுதி.
இங்கு சுருளி நீர்வீழ்ச்சி, கும்பக்கரை நீர்வீழ்ச்சி மற்றும் மேகமலை நீர்வீழ்ச்சி என பல பிரபலமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
உலகின் மிக உயரமான தேயிலைத் தோட்டம் 'கொழுக்குமலை' தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.
இதன் இயற்கை அழகு காரணமாக தமிழ் திரையுலகின் மிகவும் பிடித்தமான படப்பிடிப்புத் தளமாக தேனி விளங்குகிறது.
போடிநாயக்கனூர் ஏலக்காய் மற்றும் மசாலாப் பொருட்களுக்குப் பெயர் போனதால், இங்கு சுக்கு, மல்லி, ஏலக்காய் கலந்த 'காபி பொடி' மிகவும் பிரசித்தி பெற்றது.
தென் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு எந்த அளவு பிரபலமோ, அதே போல் தேனி மாவட்டத்தில் மாட்டு வண்டி பந்தயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி மாம்பழ உற்பத்தியில் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது
வருசநாடு மலைப்பகுதியில் முருகன் கோவில் இயற்கை அதிசயங்களில் ஒன்று. கோவிலின் 'மாமரத்து வேர்களில்' இருந்து எப்போதும் மூலிகை நீர் கசிந்து கொண்டே இருக்கும். இந்த தீர்த்தத்தில் குளித்தால் தீராத வியாதிகளும் தீரும் என்பது ஐதீகம்.
தேனி மாவட்டத்தை 'சின்ன ஊட்டி' என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டு முழுவதும் திராட்சை அறுவடை செய்யப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை மிகவும் பிரசிாரமானது.
சுருளி அருவிக்கு அருகில் உள்ள கைலாசநாதர் குகை, சித்தர்கள் வாழ்ந்த இடமாகக் கருதப்படுகிறது.
மேகமலை மற்றும் குரங்கணி காடுகளில் உள்ள மக்களால் சேகரிக்கப்படும் சுத்தமான கொம்புத்தேன் மற்றும் அடுக்கம்தேன் மருத்துவக் குணம் பெற்றது.
வீரபாண்டி திருவிழா, வீரப்ப அய்யனார் கோயில் திருவிழா, தேவதானபட்டியில் காமாட்சி அம்மன் கோயில் திருவிழா மற்றும் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் திருவிழா ஆகியவை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து .- போடிநாயக்கனூர் செல்லும் தொடருந்துப் பாதையில் தேனி தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது.
தேனி-அல்லிநகரம் வாரச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது வாரச்சந்தையாகும்.
பாரதிராஜா, பாலா, தனுஷ், செல்வராகவன் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மற்றும் இளையராஜா ஆகியோர் தேனி மண்ணைச் சேர்ந்தவர்கள்.
மங்களதேவி கண்ணகி கோவில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்ட எல்லையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது.