மாம்பழத்தில் நிறைந்துள்ள சத்துகளும்..நன்மைகளும்..!

undefined

மாம்பழத்தில் வைட்டமின் C சத்து, பெக்டின், நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன. உடலில் கொழுப்பு அளவை குறைக்கும் தன்மை கொண்டவை.
மாம்பழம் சருமத்தை சுத்தப்படும் க்ளென்சராகவும் செயல்படக்கூடியது.
மாம்பழ கூழை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம்.
சருமம் புத்துணர்வுடன் காட்சியளிக்கும். சரும துளைகளும் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி மாம்பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி வைட்டமின்A சத்தும், 25 வகையான கரோட்டினாய்டுகளும் உள்ளடங்கி இருக்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
ஒரு கப் மாம்பழ துண்டுகள் சாப்பிடுவது அன்றாட வைட்டமின் A சத்து தேவையில் 25 சதவீதத்தை பூர்த்தி செய்யக்கூடியது.
வைட்டமின் A கண்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது என்பதால் கண் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
மாம்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ரத்தசோகை பிரச்சனையை எதிர் கொள்பவர்களுக்கு இயற்கையாகவே தீர்வு வழங்கக்கூடியது.
இரும்புச்சத்து குறைபாடு கொண்ட பெண்கள் அவசியம் மாம்பழம் சாப்பிட வேண்டும்.
Explore