தினமும் தலைமுடியில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்தாலும் பிரச்சனைகள் ஏற்படும்..அதிக எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடுவதால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்படும்..அதிக எண்ணெயால் தலையில் தூசியும், அழுக்கும் அதிகமாக சேரும். இதனால் தலையில் அரிப்பு, சொரிதல் போன்றவை மட்டுமில்லாமல் பொடுகும் அதிகமாகிவிடும்..தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் முதலிடத்தில் இருப்பது அன்றும் சரி, இன்றும் சரி மரச்செக்கு தேங்காய் எண்ணெய் தான்..சிறிதளவே எண்ணெய் எடுத்துக்கொண்டு நன்றாக தலை முழுவதும் படும்படி தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும்..மணிக்கணக்கில் தலையில் எண்ணெய்யை ஊற விடாமல் தலைமுடியை எண்ணெய் பிசுக்கு நன்கு போகுமாறு கழுவி விடவும்..தலையில் மேலோட்டமாக எண்ணெய் தேய்ப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை. தலைமுடியின் அடியில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். அதன்பின் குளிக்க வேண்டும்..இப்படி செய்த பிறகு நன்றாக சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்தால் அது ஒரு சந்தோஷமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும்..Explore