தமிழ்நாட்டில இருந்துட்டு தஞ்சாவூர் பத்தி தெரியலைன்னா எப்படி?....

Maalaimalar

தமிழ்நாட்டின் 'நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் மாவட்டம் தஞ்சாவூர்.

சோழ வம்சத்தின் அதிகார மையமாகவும் தலைநகரமாகவும் விளங்கியது தஞ்சை.

 எட்டாம் நூற்றாண்டில் தனஞ்சய ஊர் என்ற பெயர் மருவி தஞ்சாவூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தஞ்சைப் பெரிய கோயில் உலக அதிசயத்தை பெற்றிருக்கிறது. கோவிலின் நிழல் தரையில் விழாது.

ஆசியாவின் மிகப் பழமையான நூலகம் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பாரம்பரியமிக்க, புவியியல் குறியீடு பெற்ற பொம்மை.

தஞ்சை வீணை ரகுநாத நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த இசைக்கருவி.

தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் நந்தி நாயக்கர் காலத்தில் சுமார் 12 முதல் 14 அடி உயரமும், 19.4 அடி நீளமும், 8.23 அடி அகலமும் 20 முதல் 25 டன் எடை கொண்டுள்ளது.

அதிகமாக தஞ்சையில் வாழும் மக்கள் பாரம்பரியமாக விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றனர்.

உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது.

அதிகளவில் கோயில்கள் உள்ள மாவட்டமாக தஞ்சாவூர் உள்ளது.