சுவையாக சமைக்க பயனுள்ள சில சமையல் குறிப்புகள்

undefined

கட்லட் செய்யும்பொழுது இஞ்சியும், கீரையும் சேர்த்து பிசைந்து பொரித்து சாப்பிட்டால் சத்தும் சுவையும் கூடுதலாக கிடைக்கும்.
வெண்டைக்காயை கொண்டு சாம்பாரும் பொரியலும் செய்வதை விட பக்கோடா தயாரித்தால் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள்.
வெண்டைக்காய்களை மெல்லிய வட்டங்களாக நறுக்கி கடலை மாவு, உப்பு, காரத்தூள், கரம் மசாலா, சிறிது கருவேப்பிலை சேர்த்து 2 ஸ்பூன் தயிர் கலந்து எண்ணெய்யில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்க சுவையான பக்கோடா தயார்.
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை எடுத்துவிட்டு வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்ய மொறுமொறுப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.
ஊறுகாய் ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்க அதற்கு தேவையான உப்பும், எண்ணெய்யும் அவசியம்.
5 கப் நறுக்கிய மாங்காய்க்கு ¾ கப் உப்பு, ¾ கப் காரப்பொடி, ¼ கப் கடுகு பொடி, ¼ கப் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து செய்ய ஒரு வருடம் ஆனாலும் கெடாது.
முள்ளங்கியை துருவி எடுத்து, கோதுமை மாவோடு கலந்து தேவைக்கேற்ப மிளகாய், உப்புடன் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால், சுவையாக இருக்கும்.
காலிபிளவரை சிறு துண்டுகளாக நறுக்கி சூடான நீரில் போட்டு ஊறவைத்து எடுத்து வடிகட்டி ஒரு துண்டில் பரப்பி நிழலில் உலர்த்தினால், புழுக்கள் இருக்காது.
Explore