நீண்ட நேரம் தயிர் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவிவிட்டு தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது..பக்கோடா செய்யும்போது கடலைமாவுக்குப் பதிலாக உடைத்த கடலை மாவை பயன்படுத்தினால் வயிற்றுக் கோளாறுகள் வராது..சப்பாத்தி மீந்து போனால், அதனை மிக்சியில் போட்டு அரைத்து உப்புமா செய்யலாம்..சமையலில் உப்பு அதிகமாகிவிட்டால் ஒரு உருளைக்கிழங்கை போட்டால் உப்பை எடுத்து விடும்..பொரியல், வறுவலில் காரம் அதிகமாகிவிட்டால் ரஸ்க்கை தூள் செய்து தூவினால் சரியாகிவிடும்..பச்சை நிறம் மாறாமல் இருக்க கீரையில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்து சமைக்க வேண்டும்..கோதுமை மாவில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கரைத்தால் உடனே தோசை ஊற்றலாம். சுவையான கோதுமை தோசை ரெடி..Explore