குடும்ப மகிழ்ச்சிக்கு அவசியம் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்

Maalaimalar

ஒவ்வொரு குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் எழும். ஆனால் அந்த சூழலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதுதான் முக்கியமானது.

கோபமாக இருக்கும்போதுகூட கடுமையான வார்த்தைகளை தவிர்த்து, நிதானமாக பேசவும். மென்மையான சொற்கள் உறவை வலுவாக வைத்திருக்க உதவும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது, வெறும் பசியை தீர்ப்பது மட்டுமல்ல, குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் அழகான வாய்ப்பும்கூட.

குடும்ப உறுப்பினர்களின் தவறுகளை மற்றவர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டி அவமானப்படுத்துவது உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும். தனியாக அழைத்து குறைகளை பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள்.

சொன்னபடி நடந்துகொள்ளும் பெற்றோரிடம் குழந்தைகளுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வும் உருவாகும். சிறிய விஷயங்களில் கூட கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல பண்பையும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

எதையும் சொல்ல பயப்பட வேண்டியதில்லை என்ற நம்பிக்கையை குடும்பத்தினரிடம் உருவாக்குவது மிகவும் அவசியமானது.

வீட்டு பொறுப்புகள் ஒருவரின் பாலினத்தின் அடிப்படையில் பிரிக்கப்படாமல், அவரவர் நேரம் மற்றும் திறனுக்கு ஏற்ப பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.

ஒருவர் வெற்றி பெறும்போது மனதாரப் பாராட்டுங்கள். தோல்வியடையும்போது அருகில் இருந்து ஆறுதல் கூறுங்கள். எந்த சூழலிலும், 'துணையாக இருப்போம்' என்ற நம்பிக்கையை குடும்ப உறுப்பினர்களுக்கு அளிப்பதே உண்மையான அன்பு.