கல்லூரி மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அழகு டிப்ஸ்கள்...
Rebecca
சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை.
சரும வகைக்கு ஏற்ப கிளென்சரனை தேர்ந்தெடுத்து, ஒரு பருத்தி உருண்டையில் கிளென்சரனை தடவி இரவு தூங்கும் முன்பு உங்களது முகத்தில் தடவ வேண்டும். இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றி விடும்.
சரும பொலிவை மேம்படுத்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தை இளமையாக வைக்க உதவும்.
தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு கண்டிப்பாக குளிக்க வேண்டும்.
உங்கள் தலைமுடிக்கு ஏற்ப கண்டிஷனரை பயன்படுத்த மறக்காதீர்கள். வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.
சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சன் ஸ்கிரீன் புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்களது சருமத்தை பாதுகாக்கும்.
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சிறிதளவு பாலுடன், மஞ்சள் தூள், கடலை மாவு கலந்து அதை உங்களது முகத்தில் தடவி 'ஸ்கிராப்' செய்து வந்தால் முகம் பொலிவாக மாறும்.
கல்லூரிக்கு சென்று வந்தவுடன் கண்டிப்பாக குளிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் இருக்கும் அழுக்கு, தூசி மற்றும் வியர்வை வெளியேற்றப்படும். இதற்காக லேசான சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தலாம்.
தினமும் கல்லூரிக்கு செல்லும்போது உங்களது சரும நிறத்திற்கு ஏற்ப சிம்பிளான மேக்கப் போட்டு செல்லுங்கள்.
ஐஷாடோ, ஐ லைனர், மஸ்காரா, லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதுபோல இரவு தூங்கும் முன் மேக்கப்பை அகற்ற மறக்காதீர்கள்.