உளுந்து வடை செய்யும் போது அதிக எண்ணெய் உறிஞ்சும். அதை தவிர்க்க கோதுமை மாவு சேர்த்து கொண்டால் அதிக அளவு எண்ணெய் இழுக்காது.
புதினா சட்னி தயாரிக்கும் போது தேங்காய் இல்லை என்றால் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளலாம். சுவை மாறாது.
முருங்கை கீரையுடன் சிறிது கடலைப்பருப்பு, உளுந்து, வரமிளகாய் வறுத்து அரைத்து பொடியாக வைத்துகொண்டால் இட்லி பொடி தேவையில்லை. இது சுவையானது மற்றும் ஆரோக்கியமானது.
முள்ளங்கி பொரியல் செய்யும்போது சிறிய துண்டு கருவாடு சேர்த்துக்கொண்டால் முள்ளங்கி மணம் மாறிவிடும். பிடிக்காதவர்கள் கூட விரும்பி உண்பார்கள்.