சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு கொண்டைக்கடலை மாவு அல்லது மக்காச்சோள மாவு சேர்த்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்..பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்..தோசை மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை பொன்னிறமாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும்..வறுத்த வெங்காயத்தை பிரியாணி அல்லது புலாவ் மீது தூவி கிளறி சாப்பிட சுவையாக இருக்கும்..உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பில்லாத தயிர் சிறிதளவு சேர்த்தால் சுவை கூடும்..Explore