சுவையாக சமைக்க எளிமையான சமையல் குறிப்புகள்

undefined

அதிரசம் செய்யும்போது மாவுடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைத்து பாயசம் செய்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
மெதுவடைக்கு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது.
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க மாவை கலக்கும்போது சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும் கலக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய்யில் சுத்தமான உப்புக்கல்லை சிறிது போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.
எந்த வகை சட்னி செய்தாலும் சிறிது புதினா சேர்த்து அரைக்க வாசனையாக இருக்கும்.
பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் அவை விரைவில் பழுக்காது.
வாழைப்பூவுடன் முருங்கைக்கீரை சேர்த்து பொரியல் செய்தால் சுவை சூப்பரோ சூப்பர்.
வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ கூட்டு செய்யும்போது தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் ருசியாக இருக்கும்.
Explore