Maalaimalar
ரசாயனக் கலப்படம் இல்லாத, நம்பகமான இயற்கை மருதாணிப் பொடியைப் பயன்படுத்துவது நல்லது.
முதன்முறையாக பயன்படுத்தும்போது சிறிய பகுதியில் சோதித்துப் பாருங்கள். அரிப்பு, சிவத்தல் அல்லது வீக்கம் ஏற்பட்டால் பயன்படுத்தாதீர்கள்.
மருதாணி முதலில் ஆரஞ்சு நிறத்தில் தோன்றி, சில மணி நேரங்களில் சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக மாறும்.
கருப்பு மருதாணியைத் தவிருங்கள். இதில் PPD போன்ற ரசாயனங்கள் இருக்கலாம். இவை சருமத்தில் கடுமையான ஒவ்வாமை மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தலாம்.
மருதாணி வைப்பதற்கு முன்பு கைகளில் உள்ள எண்ணெய், வியர்வை மற்றும் அழுக்குகளை அகற்றுங்கள்.
மருதாணி காய்ந்த பிறகு மெதுவாக உதிர்த்துவிடுங்கள். சருமத்தை அழுத்தித் தேய்க்காதீர்கள்.
மருதாணி நிறம் நீடிக்க சருமத்தை அதிகமாகத் தேய்ப்பதைத் தவிர்த்து, மென்மையான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.