சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க வேதியியல் சங்கம் ஒரு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது..அதில், கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அரிசியை சமைத்தால் அது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவும்..உடலால் உறிஞ்சப்படும் கலோரிகள் எண்ணிக்கையை குறைக்கும் என ஆராய்ந்து கூறினர்..இந்த செயல்முறை காரணமாக அரிசியில் உள்ள மாவுச்சத்து உடலால் உறிஞ்சப்படுவது கணிசமாக தடுக்கப்படுகிறது..அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தை இந்த முறை மாற்றியமைக்கிறது.தேங்காய் எண்ணெயுடன் அரிசியை சமைக்கும்போது, நார்ச்சத்து நிறைந்த ஸ்டார்ச் (starch) உருவாக்கப்படுகிறது, இது செரிமானத்தை தாமதப்படுத்துகிறது.இப்படி செய்வதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, உண்பதற்கு சுவையாகவும், அதே வேளையில் ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளதாகவும் இருக்கும்..Explore