பாக்கெட் உணவுகளில் சிவப்பு எச்சரிக்கை - FSSAI புதிய திட்டம்

Maalaimalar

சிப்ஸ், பிஸ்கெட், குளிர்பானம் போன்றவற்றை வாங்கும்போது, அதில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கிறதா என்பதை இனி எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

உணவுப் பொருட்களின் பாக்கெட் முன்பக்கத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை குறியீட்டை கொண்டுவர இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது.

குறிப்பிட்ட அளவை விட சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருந்தால், 'அதிக சர்க்கரை', 'அதிக உப்பு', 'அதிக கொழுப்பு' என சிவப்பு நிற அறுகோண வடிவில் எச்சரிக்கை இடம் பெறும்.

அதிக இனிப்புள்ள பானங்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்படும்.

நெய், சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, வெல்லம், தேன் போன்ற சில பொருட்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படும்.

இது நடைமுறைக்கு வந்தால், பாக்கெட்டின் பின்புறத்தில் உள்ள சிறிய எழுத்துகளை தேடாமல், முன்பக்கத்தை பார்த்தே உணவில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அதிகம் சேர்க்கப்பட்டிருக்கிறதா? என்பதை அறிந்து வாங்க முடியும்.

குறிப்பாக குழந்தைகளுக்கான உணவுகளைத் தேர்வு செய்யும் பெற்றோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.