கோதுமை மாவு - 1 கப், சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப் முதல் 1.5 கப் வரை, நெய் - 1 கப், தண்ணீர் - 2 கப் ,ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், முந்திரி, பாதாம் - நறுக்கியது..ஒரு கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கோதுமை மாவைச் சேர்த்து, குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும்..மாவை வறுக்கும்போதே, மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து சர்க்கரை கரையும் வரை பாகு தயார் செய்யவும்..வறுத்த கோதுமை மாவுடன் இந்த சர்க்கரை பாகை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்..மாவில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நெய் பிரியும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்..கோதுமை மாவு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி, இறக்கவும்..இறுதியாக, நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து அலங்கரித்து, சூடாகப் பரிமாறலாம்..Explore