Maalaimalar
தேவையான பொருட்கள்:
பொரி: 4 கப், வெங்காயம்: 1
தக்காளி: 1 இஞ்சி-பூண்டு விழுது: 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்:2 , மஞ்சள் தூள்: 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள்: 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்: 1/2 டீஸ்பூன்,கரம் மசாலா: 1/2 டீஸ்பூன்
தனியா தூள்: 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ்: 1 டீஸ்பூன்
டொமேடோ சாஸ்: 1 டீஸ்பூன்,எலுமிச்சை சாறு: 1 டீஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய்: 2 டேபிள் ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, பீன்ஸ், குடைமிளகாய், புதினா, கொத்தமல்லி இவற்றை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணியை போட்டு வதக்க வேண்டும்
நன்றாக வதங்கியவுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தனியா தூள் போட்டு நன்றாக பச்சை வாசம் போக வதக்க வேண்டும். இறுதியாக உப்பு, சோயா சாஸ், டோமேடோ சாஸ் ஊற்றி கிளற வேண்டும்.
இறுதியாக இறக்கி பொரியை போட்டு கிளறி எலுமிச்சை சாற்றை ஊற்றி கிளறி பரிமாறலாம்.