கேக் வாங்கப் போறீங்களா?... உங்களுக்காக சில டிப்ஸ்...

Maalaimalar

அதிக அளவு நிறம்

மிகவும் அடர்த்தியான சிவப்பு, நீலம், பச்சை, கருப்பு போன்ற நிறங்கள் அதிகமாக இருக்கும் கேக்குகளை தவிர்ப்பது நல்லது.

தயாரிக்கப்பட்ட நாள்

புதிதாக தயாரிக்கப்பட்ட கேக்கை தேர்வு செய்வது நல்லது. தயாரித்து நீண்ட நேரமான, வெளியில் அதிக நேரம் வைக்கப்பட்ட கேக்குகளை தவிர்க்கவும்.

பயன்படுத்தப்படும் பொருட்கள்

கேக் தயாரிப்பில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், அதில் பயன்படுத்தப் படும் முட்டை, பால், வெண்ணெய், கிரீம், சாக்லேட் போன்ற பொருட்களின் தரம் குறித்தும் கேக் தயாரிப் பவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வாமை இருந்தால்...

பால், முட்டை போன்றவற்றுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், கேக் தயாரிப்பவரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும்.

குழந்தைகளுக்கான கேக்

குழந்தைகளுக்கான கேக்கை தேர்வு செய்யும்போது கூடுதல் கவனம் தேவை. குழந்தைகள் சாப்பிடுவதால், பயன்படுத்தப்படும் நிறம், கிரீம் மற்றும் பிற பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தி தேர்வு செய்யுங்கள்.

தயாரிப்பில் தரம், சுத்தம்

தரமான பொருட்களைப் பயன்படுத்தி, சுத்தமான முறையில் தயாரித்து, சரியான முறையில் பாதுகாத்து வழங்கும் கேக் தயாரிப்பாளரை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

இயற்கையான வண்ணங்கள், அளவான கிரீம்

செயற்கை சாயங்களுக்குப் பதிலாக இயற்கை பழங்கள், கோகோ பவுடர் ஆகியவற்றைப் பயன்படுத்தும் கேக்குகளையும், அளவான கிரீம் கொண்ட கேக்குகளையும் தேர்ந்தெடுப்பது நல்லது.

தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்...