பெருமாள் கோவில் மிளகு சாதம்

Maalaimalar

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 200 கிராம்

தண்ணீர் - 3 கப்

நெய்- 5 டேபிள் ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

மிளகு - 3 டீஸ்பூன்

சீரகம்- 1 டீஸ்பூன்

முந்திரி-10-12

கறிவேப்பிலை-2 கொத்து

பெருங்காயத் தூள்- 4 டீஸ்பூன்

செய்முறை:

பச்சரிசியை குக்கரில் தண்ணீர், உப்பு, 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மென்மையாக வேக வைக்கவும்.

மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக இடித்துவைத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்து, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்க்கவும். இடித்த மிளகு, சீரகத்தைச் சேர்த்து சில விநாடிகள் மட்டும் வதக்கவும்.

நெய் தாளிப்பை, வேகவைத்த சாதத்தில் சேர்த்து மெதுவாக கிளறவும்.

இதுதான் மிளகோரை எனப்படும் 'மிளகு சாதம்'. இது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயார் செய்யப்படும் பிரசாதமாகும்.