Maalaimalar
தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி "முத்து நகரம்" என்று அழைக்கப்படுகிறது.
இங்கு வ.உ.சிதம்பரனார் பெயரில் முக்கிய இயற்கை துறைமுகம் அமைந்துள்ளது.
இந்தியாவில் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யும் முக்கியப் பகுதி தூத்துக்குடி.
தூத்துக்குடி வரலாற்று ரீதியில், பரதவர் இன மக்கள் மீன் பிடித்தும், அதிகளவில் முத்துகுளித்தும் வந்தனர்.
இங்கு தயாராகும் உப்பு, ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும்
தூத்துக்குடியில் இன்றும் மக்கள், சங்கு குளிக்கும் தொழில் செய்கின்றனர். இதை அகநானூறு நூலில் 350-வது பாடலில் காணலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரையில் அமைந்த பிரசித்தி பெற்ற முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர்
தூத்துக்குடி என்றாலே ஏணிப்படி மிட்டாய் மற்றும் நெய் குச்சி மிட்டாயின் தித்திப்பு சுவைக்கு தனி மவுசு தான்.
1711-ல் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கோதிக் கட்டிடக்கலை தேவாலயம் இங்குள்ளது.
தூத்துக்குடியில் சுவையான கடல் உணவுகளுக்கு இந்த நகரம் மிகவும் பிரசி்த்தி பெற்றது.
வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை அமைந்துள்ள பாஞ்சாலங்குறிச்சி & மகாகவி பாரதியார் பிறந்த ஊரான எட்டையாபுரம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன.
கழுகுமலை வெட்டுவான் கோவில், ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சிறப்புமிக்கவை.
தூத்துக்குடியில் மக்ரோன் என்ற இனிப்புவகை சிறப்பானது & சுவையானது.
கிழக்குக் கடற்கரையோரத்தில் சென்னைக்கு அடுத்து தூத்துக்குடியில் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் நடைபெறுகிறது.