சர்க்கரை இல்லாமல் ஸ்வீட் சாப்பிடலாம்!

Maalaimalar

பேரீச்சம்பழ லட்டு

சர்க்கரைக்கு பதில் பேரீச்சம்பழத்தின் இயற்கை இனிப்பு. நார்ச்சத்து அதிகம், இரும்புச்சத்து நிறைந்தது. உடனடி எனர்ஜி தரும் சூப்பர் ஸ்நாக்.

நட்ஸ் லட்டு

பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் கலந்த சக்தி உருண்டை. புரோட்டீன், ஹெல்த்தி ஃபேட் நிறைந்தது. டயட்டில் இருப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்.

எள்ளுருண்டை

நம் பாட்டி காலத்து பாரம்பரிய ஸ்வீட். வெல்லம்+எள்= கால்சியம், இரும்புச்சத்து சூப்பர் காம்போ. எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

கடலை மிட்டாய்

வேர்க்கடலை + வெல்லம். வெள்ளை சர்க்கரையே இல்லை. புரோட்டீன் நிறைந்தது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஹெல்த்தி ஸ்வீட்.

உலர் பழ இனிப்புகள்

உலர் திராட்சை, அத்திப்பழம், ஆப்ரிகாட் கொண்டு செய்யப்படும் இனிப்பு! செயற்கை சர்க்கரை இல்லை, இயற்கையான இனிப்பு மட்டுமே.

ராகி லட்டு

சிறுதானியங்களின் ராணி ராகி. கால்சியம் அதிகம், சர்க்கரை குறைவு, வெல்லம் சேர்த்து செய்யலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

தேங்காய் லட்டு

நார்ச்சத்து அதிகம், விரைவில் செய்யக்கூடியது. தீபாவளிக்கு பெஸ்ட் லோ-சுகர் ஸ்வீட்.