வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும் நாரத்தங்காய்!!

Rebecca

நாரத்தங்காய் சிறிய வகை மரத்தில் காய்க்கிறது. முட்கள் நிறைந்திருக்கும். பத்து அடி உயரம் வரை வளரும். இதன் இலைகள் தடித்து காணப்படும். அதில் நறுமணமிக்க எண்ணெய் நிறைந்து உள்ளது.
காய்களின் தோலும் தடித்திருப்பதால், அதிலும் எண்ணெய் சத்துகள் மிகுந்துள்ளன. இந்த எண்ணெய் சத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. நல்ல மணமும் இதனால் கிடைக்கிறது.
நாரத்தையில் வைட்டமின் C மற்றும் B சத்து அதிகம் இருக்கிறது. கால்சியம், இரும்பு, தாது சத்துக்களும் அடங்கியுள்ளன. இதன் சாறு இனிப்பும், புளிப்பும் அடங்கியது.
'நாரத்தங்காயின் சாறு ரத்தத்தை சுத்தமாக்கும். வாதம், வயிற்றுப் புழுவை போக்கும். பசியை அதிகரிக்கும்' என்று சித்த மருத்துவம் கூறுகிறது
உணவை ஜீரணிக்க இது உதவுவதால் இதற்கு 'போஜன கஸ்தூரி' என்ற சிறப்பு பெயர் உண்டு. 'ஏணி, தோணி, அன்னாவி என்றொரு முதுமொழி உண்டு.
சாப்பிட்ட உடன் சிலருக்கு நெஞ்செரிச்சல், வயிற்று வலி ஏற்படும். உணவு மேல் நோக்கி வருவது போன்ற உணர்வுடன் வாந்தியும் தோன்றும்.
உடலில் பித்தம் அதிகரிப்பதால் தலை சுற்றல், மயக்கம், நெஞ்சுவலி, ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்களுக்கும் நாரத்தங்காய் சிறந்த மருந்தாகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தி, பசியின்மை, மயக்கத் திற்கு நாரத்தை சாற்றில் நீர் கலந்து, சர்க்கரை சேர்த்து பருக வேண்டும்.
அதிக வாந்தி ஏற்படும்போது உடலில் நீர் இழப்பு ஏற்படும். உட லில் உள்ள சத்துக்கள் குறையும். நாரத்தை சாறு பருகினால் இழந்த சத்துக்களை ஈடு செய்யலாம். வாந்தியும் நின்றுபோகும்.
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கவேண்டும் என்றால், இரண்டு தேக்கரண்டி சாறு எடுத்து, சிறிது வெல்லம் கலந்து, நீர் சேர்த்து பருகவேண்டும். நாரத்தையில் உள்ள பொட்டாசியம் சத்து இதயத்தில் ரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றது.
முகத்தில் உள்ள கரும் திட்டுகள் மற்றும் கரும்புள்ளிகள் மீது நாரத்தை சாற்றை தேய்த்து வந்தால், அவை நீங்கி முகம் பொலிவு பெறும். தலையில் உருவாகும் பொடுகை போக்கவும் நாரத்தை சாறு பயன்படும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் ரத்த சோகை, பசியின்மை, மாந்தம் போன்றவற்றிற்கு நாரத்தம் பழச்சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து, அதில் இரண்டு தேக்கரண்டி திராட்சை சாறும், சிறிதளவு சர்க்கரையும் கலந்துகொடுக்கவேண்டும்.
Explore