20 நிமிடத்தில் மணக்க மணக்க காளான் பிரியாணி!

Maalaimalar

பாஸ்மதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, பின் 70% வரை வேக வைத்து வடிகட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் + நெய் ஊற்றி, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் காளான், பிரியாணி மசாலா, தயிர் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

வேக வைத்த சாதத்தை காளான் மசாலா மேல் பரப்பவும். மேலே கொத்தமல்லி, புதினா, சிறிது நெய் தூவவும்.

கடாயை மூடி, குறைந்த தீயில் 10 நிமிடம் தம் போடவும். கேஸை அணைத்து 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.

மணக்க மணக்க காளான் பிரியாணி ரெடி

தயிர் பச்சடி, கத்தரிக்காய் கிரேவியுடன் சேர்த்து சாப்பிட்டால் ஓட்டல் சுவையை மிஞ்சும்! இன்றே செய்து பாருங்கள்!