பெரும்பாலான ஆண்கள் விந்தணு ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. சில உணவுகள் விந்தணு ஆற்றலை அழிக்க கூடியது.
இப்படிப்பட்ட உணவுகள் உங்கள் கருவுறுதலையும், டெஸ்டோஸ்டிரோனையும், ஹார்மோன் ஆரோக்கியத்தையும் அழிக்கின்றன.
பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களைக் கொண்டுள்ளன. உடலில் ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்பட்டு டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கின்றன. இதனால் ஆண்களுக்கு விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பெரும்பாலும் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை விந்தணுக்களின் இயக்கம் மற்றும் செறிவைக் குறைக்கின்றன.
டிரான்ஸ் கொழுப்புகள் என்பது ஒரு வகை கொழுப்பு அமிலங்கள். இது கெட்ட கொழுப்பை அதிகரித்து, நல்ல கொழுப்பை குறைக்கும்.
துரித உணவு மற்றும் பேக்கரி பொருட்களில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் குறைக்கப்பட்ட விந்தணு தரத்துடன் தொடர்புடையது.
அதிகப்படியான ஆல்கஹால் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை சீர்குலைத்து, டெஸ்டிகுலர் அளவைக் குறைக்கிறது.
அதிக அளவில் சர்க்கரை உட்கொள்ளவதால் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். மேலும் ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்கும், காலப்போக்கில் டெஸ்டோஸ்டிரோனை குறைக்கும் இதனால் விந்தணு குறைபாடு ஏற்படலாம்.
எனவே ஆண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் உணவு முறையில் மாற்றம் செய்து , நன்றாக தூங்கி எழுந்தால் ஹார்மோன் ரீதியான மாற்றங்களை உங்களால் உணர முடியும்.